சுடச்சுட

  

  விரிவான மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

  Published on : 07th June 2014 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை பொது மக்களுக்கு முறையாகச் சென்றடையாததால் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் அவதிப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

   கடந்த திமுக ஆட்சியில், ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் உயர்

  சிகிச்சை பெறுவதற்காக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

  அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு  தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ள மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

   ஒவ்வொரு பகுதிகளுக்கு உள்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு  அட்டை வழங்குவதற்காக தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழைக் கொடுத்து காப்பீட்டு அட்டை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், பழைய கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை அல்லது குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருவாய்ச் சான்றிதழை காட்டி சிகிச்சை பெற்று வந்தனர். இந் நிலையில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இத் திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானச் சான்றிதழைக் கொடுத்து சிகிச்சை

  பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

   பெரும்பாலான பகுதிகளில் பழைய காப்பீட்டு அட்டையைக் கொடுத்து புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கும், புதிதாக அரசு காப்பீட்டு  அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், சிலர் தவிர அதிகமானோருக்கு புதிய  அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

   இதனால், அவசர கால சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகள், நகரப் பகுதிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி விரைவாக அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai