சுடச்சுட

    

    கோவை மாநகராட்சியில் திட்டப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதால் அத் திட்டத்துக்குப் பொறுப்பு வகித்த மாநகராட்சிப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

     கோவை மாநகராட்சியில் ரூ.3,200 கோடி மதிப்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்துக்கான செயற் பொறியாளராக மாநகராட்சி கிழக்கு மண்டல நிர்வாகப் பொறியாளர் லட்சுமணன் பணியாற்றி வந்தார்.

     ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பாதாளச் சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் திட்டங்கள் லட்சுமணன் மேற்பார்வையில் நடைபெற்றன. இத் திட்டங்களில் பல இடங்களில் தரமில்லாமல் பணிகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

      இதையடுத்து, நிர்வாகக் காரணங்களுக்காக பொறியாளர் லட்சுமணனை இடைநீக்கம் செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் க.லதா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai