சுடச்சுட

  

  அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

  By கோவை,  |   Published on : 05th June 2014 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

  உரிய அனுமதியில்லாமல் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கோவை மாநகராட்சி விளம்பர பலகைகளை அகற்றவில்லை.

  தேர்தல் நடத்தை விதிமுறைகள் இப்போது இல்லாததால் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.

  கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் 6, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் 9, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சத்தி மற்றும் அவிநாசி சாலைகளில் 56, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட செட்டிவீதி சந்திப்பு, பாலக்காடு சாலை மற்றும் ஆத்துப்பாளையத்தில் 13 என மொத்தம் 84 விளம்பர பலகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai