Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் நூடுல்ஸ் வியாபாரி உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீஸார் கூறியது:

    கோவை, சிவானந்தா காலனி, மாசாணியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் எம்.வேலுச்சாமி (41). நூடுல்ஸ் வியாபாரியான இவர், புதன்கிழமை காலையில் பீளமேடு பகுதியில் உள்ள குடோனுக்குச் சென்றுவிட்டு லட்சுமி மில் நோக்கி பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

    எஸ்úஸா பங்க் அருகில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் கீழே விழுந்த நிலையில், அதே பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.

    சம்பவ இடத்துக்குச் சென்ற போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், வேலுச்சாமி உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் செந்தில்குமாரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai