சுடச்சுட

    

    கோவையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    கோவை, சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் (46). புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி நிர்மலா. இவரும் அதேபகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகன், மகள் இருவரும் திங்கள்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டதால் ராபர்ட், நிர்மலா இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். புதன்கிழமை காலையில் இருவரும் பணிக்குச் சென்றுவிட்டனர். மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

    இதுகுறித்து பீளமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் கே.சுகுமாரன், உதவி ஆணையர் தனபால் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai