சுடச்சுட

    

    கம்யூனிஸ்ட் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்படவில்லை

    By கோவை,  |   Published on : 05th June 2014 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, போராட்டங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.

    கோவை சிங்காநல்லூர் நகர கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற அக்கட்சியின் மறைந்த மூத்த தலைவர் கே.பாலதண்டாயுதத்தின், 41-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியது:

    கே.பாலதண்டாயுதம் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், ஆங்கிலப் புலமை மிக்கவர், களப்போராளி என பன்முகத் தன்மை கொண்டவர். நெல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 12 ஆண்டுகள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார். அவரது சிறைச்சாலை அனுபவங்கள் குறித்து "ஆயுள் தண்டனை அனுபவங்கள்' என்ற தலைப்பில் நூலாக அவர் வெளியிட்டுள்ளார்.

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அதன் போராட்டங்கள், வரலாறுகள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் வரலாறு தெரியாத வல்லூறுகள் நம்மை வட்டமிடுகின்றன. இதுபோல பல நிகழ்வுகள் பதிவாகாமல் தொலைந்துபோய் உள்ளன.

    இலக்கிய விழாவில் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் ஒருவர் பேசுகையில், யானை மிதித்து பாரதி உயிரிழந்ததாக குறிப்பிட்டார். ஆனால், வரலாற்றுப் பதிவு இல்லாததால் நம்மில் பலர் அதனை உண்மை என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

    ஆனால், உண்மையில் யானை மிதித்து பாரதி சாகவில்லை. திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது, அங்குள்ள யானையிடம் விளையாட்டுக் காட்டுவது அவரது வழக்கம். ஒருநாள் யானைக்கு மதம் பிடித்திருந்தது.

    இது தெரியாமல் வழக்கம்போல் அதன் அருகில் சென்றபோது அவரை யானை தாக்கியது. இதில் நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார். அதன்பிறகு ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற, இலக்கியக் கூட்டத்தில் "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசியுள்ளார்.

    இதனை அவர், சுதேசமித்திரன் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு சில நாள்கள் கழித்து, நோய்வாய்ப்பட்டுத் தான் அவர் உயிரிழந்தார். நமக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது; அதனைப் பதிவு செய்வது அவசியம் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வி.எஸ்.சுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, முன்னாள் துணை ஆட்சியர் வி.சுப்ரமணியம், டாக்டர் எம்.மயில்சாமி, சிங்காநல்லூர் நகரச் செயலாளர் எஸ்.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai