சுடச்சுட

    

    கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜாமபந்தி நிகழ்ச்சியில், கிராம கணக்குகளை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தணிக்கை செய்தார்.

    கிணத்துக்கடவு வட்டத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர், வடசித்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட மெட்டுவாவி, பனப்பட்டி, குருநல்லிபாளையம், பெரியகளந்தை, காட்டம்பட்டி, சிறுகளந்தை, ஆண்டிப்பாளையம், கப்பளாங்கரை வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

    மேலும், வடசித்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய்க் கிராமங்களின் கிராம கணக்குகளைப் பார்வையிட்டு தணிக்கை செய்தார். முன்னதாக, நில அளவைக் கருவிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் விரைவாகத் தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், 8 நபர்களுக்கு சாதி, இருப்பிட, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களையும், 1 நபருக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டாவையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு நலிந்தோர் உதவித் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரத்திற்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து, ரூ.2.22 கோடியில் 12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம், 89 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் குடியிருப்பு ஆகிய கட்டடப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வு தளம் மற்றும் கழிப்பிடங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்தப் பணிகளை 2015 ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நில அளவை) மணிசேகரன், கிணத்துக்கடவு வட்டாட்சியர் எஸ்.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai