சுடச்சுட

    

    கே.எம்.சி.ஹெச். மருந்தாக்கியல் கல்லூரி விழிப்புணர்வுப் பேரணி

    By கோவை  |   Published on : 05th June 2014 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கே.எம்.சி.ஹெச். மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள் சார்பில், புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இருந்து காளப்பட்டி சாலையில் உள்ள மருந்தாக்கியல் கல்லூரி வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    முன்னதாக, பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இப் பேரணியின்போது புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

    இதில், முதன்மை கல்லூரி நிர்வாக இயக்குநர் ஓ.டி.புவனேஷ்வரன், முதல்வர் ராஜசேகரன், துணை முதல்வர் கே.எஸ்.ஜி.அருள்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai