சுடச்சுட

    

    தேசிய சப்-ஜூனியர் வலு தூக்கும் போட்டி: பெண்கள் பிரிவில் ஒடிஸா ஆதிக்கம்

    By கோவை  |   Published on : 05th June 2014 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெற்று வரும் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில், பெண்கள் பிரிவில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளின் விவரம்:

    ஆண்கள் பிரிவு (66 கிலோ)

    ஒடிஸாவின் சுமித்குமார் சாகு முதலிடமும், ஒடிஸாவின் பிக்ரம் பெஹேரா இரண்டாமிடமும், மேற்குவங்கத்தின் புரோதீப் குமார் ராய் மூன்றாமிடமும் பெற்றனர்.

    74 கிலோ: மத்தியப் பிரதேசத்தின் சந்தீப் ஜாதவ் முதலிடமும், மிசோராமின் ஜோசப் லால்நன் மாவியா, தெலங்கானாவின் எம்.அமர்நாத் யாதவ் மூன்றாமிடமும் பெற்றனர்.

    83 கிலோ: ஒடிஸாவின் சங்ராம் பெஹேரா முதலிடமும், தெலங்கானாவின் கிருஷ்ணா சாத்வேல் இரண்டாமிடமும், பஞ்சாபின் அமர்ஜீத் சிங் மூன்றாமிடமும் பெற்றனர்.

    93 கிலோ: மிசோராமின் வில்லியம் பி.வன்லால்பெலா முதலிடமும், தில்லியின் யாஷ்குமார் ஜிண்டால் இரண்டாமிடமும், ஆந்திரப் பிரதேசத்தின் எம்.அஜய்குமார் மூன்றாமிடமும் பெற்றனர்.

    பெண்கள் பிரிவு (43 கிலோ)

    ஒடிஸாவின் திரெளபதி சிங் முதலிடமும், கேரளத்தின் அம்ரிதியா இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் தானு ரங்காரி மூன்றாமிடமும் பெற்றனர்.

    47 கிலோ: உத்தரப் பிரதேசத்தின் கெளரி பாண்டே முதலிடமும், ஒடிஸாவின் லட்சுமி மணிசிங் இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் சோனால் சாவந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.

    52 கிலோ: ஒடிஸாவின் தேபி சிங் முதலிடமும், கேரளத்தின் எஸ்.அக்ஷயா இரண்டாமிடமும், எஸ்.அபர்ணா மூன்றாமிடமும் பெற்றனர்.

    57 கிலோ: மேற்குவங்கத்தின் சோமா தாராப்தர் முதலிடமும், மகாராஷ்டிரத்தின் பிரகதி சாரூ இரண்டாமிடமும், கேரளத்தின் எம்.எல்.அபர்ணா மூன்றாமிடமும் பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai