சுடச்சுட

    

    பிளாஸ்டிக்கை ஒழிக்கப் பாடுபடும் சுய உதவிக் குழுக்களுக்குப் பரிசு

    By கோவை  |   Published on : 05th June 2014 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கும் சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கவும், பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறப்பான சுய உதவிக் குழுக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான முறையில் இயற்கைப் பொருளான காகிதப் பைகள், பாக்கு மட்டை பொருட்கள், சணல் பைகள் தயாரிப்பில் ஈடுபடும் குழுக்களுக்கு பரிசுத் தொகை சுற்றுச்சூழல் துறை மூலமாக வழங்கப்பட உள்ளது.

    முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. பரிசுகளைப் பெற தகுதிகளைக் கொண்ட சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுய உதவிக் குழுக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேப்பர், சணல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஜூன் 6-க்குள் கூடுதல் இயக்குநர், திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai