சுடச்சுட

    

    "மழைக் காலத்தை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை தேவை'

    By கோவை  |   Published on : 05th June 2014 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் மழைக் காலத்தை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை சில நாள்களில் துவங்கும் என்றும், சராசரி அளவை விட அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மழை நீர் வீணாகாமல் குளம், குட்டைகளில் சேகரித்து வைக்கவும், மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு உண்டு. பருவமழை துவங்கும் முன் நீர்வழித் தடங்களைத் தூர்வாரவும், குளம், குட்டைகளைத் தூர்வாரவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தி போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai