சுடச்சுட

  

  "முறையற்ற வாழ்க்கையால் இயற்கை அழிந்து வருகிறது'

  By பொள்ளாச்சி,  |   Published on : 05th June 2014 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் முறையற்ற பயன்பாட்டால் இயற்கையை அழித்து வருகிறோம் என்று பி.ஏ. கல்லூரி முதல்வர் செல்வின் பேசினார்.

  பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பி.ஏ. கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

  இதில், கல்லூரி முதல்வர் செல்வின் பேசியது:

  இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையே இன்பமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இன்றைய அவசர வாழ்க்கையில், இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். பெருகிவரும் மின்சாதனப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் மற்றும் ரசாயன உரப் பயன்பாட்டால் உலகை வெப்பமயமாக்கி வருகிறோம்.

  இளைய சமுதாயத்தினர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுச் செல்வதோடு, மரங்கள், நிலத்தடி நீர், தூய்மையானக் காற்று மற்றும் வளமான விளைநிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்த வேண்டும். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் முறையற்ற பயன்பாட்டால் இயற்கையை அழித்து வருகிறோம். ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலின்படி மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மக்கள் மத்தியில் நல்லதொரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கையாள முடியும். மாணவர்களால் மட்டுமே இத்தகைய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புரட்சியை ஏற்படுத்தி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai