Enable Javscript for better performance
வட மாநில இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் 7 வயதுச் சிறுவனைக் கொலை செய்ய முயன்ற வட மாநில இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிகேஷ் (20). சில ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், குறிச்சி பிரிவில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.

    கடந்தாண்டு ஜூன் 10-ஆம் தேதி வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுவனை கழுத்தை நெரித்து சாக்கடையில் வீசிக் கொலை செய்ய முயன்றதாக போத்தனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

    இவ் வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், கைது செய்யப்பட்ட ரிகேஷுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai