Enable Javscript for better performance
வேன் மீது லாரி மோதி இருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே புதன்கிழமை வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பொள்ளாச்சியை அடுத்த ஆவலப்பம்பட்டியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. டீக்கடை வைத்துள்ளார். நாச்சிமுத்துவின் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக அதே ஊரைச் சேர்ந்த கிருபாகரன்(42), லோகநாதன்(24) ஆகியோர் புதன்கிழமை ஆவலப்பம்பட்டியில் இருந்து வேனில் பொள்ளாச்சி சென்றனர். வேன், பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையம் அருகில் சென்றபோது எதிரில் வந்த லாரி, வேன் மீது மோதியது. இதில், வேனில் பயணம் செய்த கிருபாகரன், லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி போலீஸார், லாரி ஓட்டுநர் சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai