Enable Javscript for better performance
17தனியார் மருத்துவமனையில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    17தனியார் மருத்துவமனையில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

    By கோவை  |   Published on : 05th June 2014 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியது:

    கோவை, கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் எம்.வேலுசாமி (52). கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக செவ்வாய்க்கிழமை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    நீண்ட நேரம் கழித்து, வேலுசாமிக்கு அறுவைச் சிகிச்சையின்போது இதய அடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே வேலுசாமி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்துக்குச் சென்ற சாயிபாபா காலனி போலீஸார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். வேலுசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai