சுடச்சுட

    

    ஆழியாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

    By பொள்ளாச்சி,  |   Published on : 06th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு முதல்வர் உத்தரவுப்படி வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணையான ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. பழைய ஆயக்கட்டில் நெல் விவசாயம் அதிகம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆழியாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மலர் தூவி தண்ணீர் திறந்து விட்டார்.

    இதில், சட்டப்பேரவை துணைத்தலைவர் ஜெயராமன், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமி, முன்னாள் எம்.பி. சுகுமார், பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்ககுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    விநாடிக்கு 150 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் போக பாசனத்திற்கு 1,074 கன அடியும், குடிநீர்த் தேவைகளுக்காக

    563 கன அடியும், மொத்தம் 1,637 மில்லியன் கன அடி தண்ணீர், ஜூன் 5-ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

    பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பைந்தமிழ்ச் செல்வன், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளநிலைப்பொறியாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai