இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவர் கைது
By கோவை | Published on : 06th June 2014 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவையில் புதன்கிழமை நள்ளிரவில் இளைஞரை கட்டை மற்றும் கம்பியால் தாக்கி பணம், செல்ஃபோனைப் பறித்த இருவரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24). இவர், கோவை புலியகுளத்தில் தங்கி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை நள்ளிரவு பணி முடிந்து ரேஸ்கோர்ஸ் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, நியூ ஸ்கீம் சாலை அருகே பைக்கில் வந்த இருவர் அவரை மறித்து கட்டை மற்றும் கம்பியால் தாக்கி ரூ.3,000 மற்றும் செல்ஃபோனைப் பறித்துக் கொண்டு தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரேஸ்கோர்ஸ் போலீஸார், வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரை சுங்கம் அருகே பிடித்தனர்.
விசாரணையில், அவர் கரும்புக்கடை, பூங்கா நகரைச் சேர்ந்த எம்.காஜா நவாஸ் (24) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் வந்த கரும்புக்கடையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரைத் தேடி வருகின்றனர்.