சுடச்சுட

    

    அன்னூர் குருக்கிலியாம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

    அன்னூர், கெம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பண்ணக் கவுண்டர்(85). இவர், புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் பொகலூர் செல்வதற்காக குருக்கிலியாம்பாளையம் அருகே மேகிணறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில், பலத்த காயமடைந்த சுப்பண்ணக் கவுண்டர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீஸார், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai