சுடச்சுட

  

   துடியலூர் அருகே உள்ள சின்னத்தடாகம் ஊராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  ஊராட்சித் தலைவர் டி.என்.வேலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், பார்வையாளராக கலந்து கொண்ட ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, தேசிய ஊரக

  வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் பாரத் சுகாதார இயக்கத்தின் சார்பில் தலா ரூ. 11 ஆயிரம் செலவில் அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

  தூய்மையான கிராமம் ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  துணைத் தலைவர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் தடாகம் ஆனந்தன், ஊராட்சி

  உறுப்பினர்கள் கனகராஜ், மாணிக்கம், கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai