Enable Javscript for better performance
சிறுவாணி குழாயை அடைப்பதை நிறுத்த பாலக்காடு ஆட்சியரிடம் ம.தி.மு.க. கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிறுவாணி குழாயை அடைப்பதை நிறுத்த பாலக்காடு ஆட்சியரிடம் ம.தி.மு.க. கோரிக்கை

    By கோவை  |   Published on : 06th June 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் குழாயை அடைப்பதை நிறுத்த வேண்டும் என்று, பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் ம.தி.மு.க. மனு கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, ம.தி.மு.க. இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கொடுத்த மனு விவரம்:

    75 ஆண்டுகளாக கோவை மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் குடிநீருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், கோவையில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

    கோடை காலத்தில் பழைய பைப் லைன் மூலமாக கிடைக்கும் நீர்தான் கோவை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஆனால், பழைய பைப் லைனை அடைக்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளதால், கோவை மக்களுக்கு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோவையில் அதிக அளவில் வசிக்கின்றனர். சிறுவாணி அணையில் பழைய பைப் லைனை அடைத்தால் கோவையில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். சிறுவாணி அணையின் பழைய பைப் லைனை அடைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai