சுடச்சுட

    

    சூலூர் வட்டத்துக்கு உள்பட்ட கருமத்தம்பட்டி உள் வட்டத்தில் அடங்கிய 11 கிராம ஊராட்சிகளுக்கான ஜமாபந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஹெச்.இளங்கோவன் தலைமையில் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை தனி வட்டாட்சியர் ஜி.பேபி பாலா, சூலூர் வட்டாட்சியர் ஹபிபூர் ரகுமான் ஆகியோர் கிராம ஊராட்சிகளின் கணக்கினங்களை சரி பார்த்து, பொது மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

    இதில், கருமத்தம்பட்டி வட்டத்தைச் சேர்ந்த பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், மோப்பிரிபாளையம், கிட்டம்பாளையம், கருமத்தம்பட்டி, செம்மாண்டாம்பாளையம், கரவளிமாதப்பூர், கணியூர், அரசூர், நீலம்பூர், மயிலம்பட்டி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில், செம்மாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த

    கோமதி என்பவர் அளித்த குடும்ப அட்டையில் பெயர் மாறுதலுக்கான மனு பரிசீலிக்கப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

    பட்டா மாறுதல், குடும்ப அட்டை, சாதி, வருமானச் சான்றுகள் உள்ளிட்ட 94 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனைக்குப்

    பின் இம் மனுக்கள் மீது வரும் 11-ஆம் தேதி தீர்வு காணப்படும் என தனி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    இம் முகாம், தொடர்ந்து 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    10-இல் செலக்கரிச்சல் உள் வட்டத்துக்கும், 11-இல் வாரப்பட்டி உள் வட்டத்துக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai