சுடச்சுட

    

    சரியான சேவை வழங்காத செல்ஃபோன் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்தாண்டு ஜூலை 31-ஆம் தேதி உடுமலை, பழனி சாலையில் உள்ள தனியார் முன்னணி செல்ஃபோன் விற்பனை நிறுவனக் கிளையில் ரூ.25,000 கொடுத்து செல்ஃபோன் வாங்கியுள்ளார்.

    வீட்டுக்குச் சென்று பார்க்கையில் அந்த செல்ஃபோன் சரியாக வேலை செய்யவில்லையாம். அந்த செல்ஃபோன் நிறுவன விற்பனை கிளைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர்கள் அதை சரியாக கவனிக்காமல், அந்த செல்ஃபோன் சார்ந்த நிறுவன சேவை மையத்துக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அந்த சேவை மையமும் செல்ஃபோனை சரிசெய்து கொடுக்கவில்லை.

    இதனால், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி சில நாள்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஸ்வரனுக்கு செல்ஃபோன் விற்பனை நிறுவனம்

    ரூ.10,000 இழப்பீடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.1,000, அதோடு அவர் வாங்கிய செல்ஃபோனை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் ரூ.25,000 ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai