Enable Javscript for better performance
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்

    By கோவை  |   Published on : 06th June 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, கோவை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.

    கடந்த திமுக ஆட்சியில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. அக் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளரும் கூட. இவர், அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டு ஈரோடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக என்.கே.கே.பி.ராஜா, அவரது மனைவிகள் பரிமளா தேவி, உமா மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் எஸ்.ராமசாமி, கே.என்.சத்யமூர்த்தி, எஸ்.செந்தில்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இவ் வழக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ராஜா உள்பட இருவர் ஆஜராகினர். அப்போது, ராஜாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை அரசுடைமையாக்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போதைய ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. முருகேசன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதைத் தொடர்ந்து இவ் வழக்கு ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai