சுடச்சுட

    

    கோவையில் துப்பாக்கி முனையில் 25 பவுன் கொள்ளையடிக்கப்பட்டதாக வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம் (22). சில ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த அவர், செல்வபுரத்தில் தங்கி, வெரைட்டிஹால் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சலீவன் வீதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறார்.

    இந் நிலையில், வெரைட்டிஹால் போலீஸாருக்கு வியாழக்கிழமை ஃபோன் செய்து, தனது நகைப்பட்டறைக்கு வியாபாரம் தொடர்பாக வந்த மூவர், துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, சம்பவ இடத்தை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் கே.சுகுமாரன் பார்வையிட்டார். இருப்பினும், கௌதம் அளிக்கும் தகவல்கள் முரணாக இருப்பதால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai