சுடச்சுட

    

    தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் கார்த்திக் முதலிடம்

    By கோவை  |   Published on : 06th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெற்று வரும் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீரர் கே.கார்த்திக் முதலிடம் பெற்றார்.

    தமிழக வலு தூக்கும் சங்க ஆதரவுடன் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டி முடிவுகள் விவரம்:

    ஆண்கள் (53 கிலோ): மகாராஷ்டிரத்தின் அக்ஷய் ரத்தோடு முதலிடமும், சத்தீஷ்கரின் டி.விக்கி நியால் இரண்டாமிடமும், கேரளத்தின் எஸ்.மிதுன் மூன்றாமிடமும் பெற்றனர்.

    59 கிலோ: தமிழகத்தின் எம்.லெனினிசாம் முதலிடமும், தெலங்கானாவின் ஜி.ரமேஷ் இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் சுனில் ஆர்.கெளதம் மூன்றாமிடமும் பெற்றனர்.

    66 கிலோ: தெலங்கானாவின் எம்.ஜானகிராம் முதலிடமும், கேரளத்தின் ஜிஜோ ஜோசப் இரண்டாமிடமும், ஒடிசாவின் சுமித்குமார் சாகு மூன்றாமிடமும் பெற்றனர்.

    74 கிலோ: தமிழகத்தின் கே.கார்த்திக் முதலிடமும், தெலங்கானாவின் எம்.அமர்நாத் யாதவ் இரண்டாமிடமும், கேரளத்தின் சனல் ஜான்சன் மூன்றாமிடமும் பெற்றனர்.

    பெண்கள் (43 கிலோ): கேரளத்தின் அனிதா ஜோசப் முதலிடமும், தமிழகத்தின் எம்.ஜி.ராணி இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் சிம்ரன் ஆவதி மூன்றாமிடமும் பெற்றனர்.

    47 கிலோ: கேரளத்தின் அஞ்சு ராஜூ முதலிடமும், தமிழகத்தின் ஆர்.ரம்யா இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் பிரகதி ரவாத்கர் மூன்றாமிடமும் பெற்றனர்.

    52 கிலோ: ஒடிசாவின் தேபி சிங் முதலிடமும், கேரளத்தின் அஸ்வினி சுரேஷ் இரண்டாமிடமும், மணிப்பூரின் சோங்தாம் தேவி சோன்யா மூன்றாமிடமும் பெற்றனர்.

    57 கிலோ: கேரளத்தின் எஸ்.பாத்திமா பீவி முதலிடமும், எஸ்.பி.ஸ்ரீ குட்டி இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் மீனா காசரே மூன்றாமிடமும் பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai