சுடச்சுட

    

    கேரள மாநிலத்திற்கு மணல் கடத்திச் சென்ற இரண்டு லாரிகளை துடியலூர் அருகே உள்ள ஆனைகட்டியில் போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

     கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக லாரிகள் மூலமாக மணல் கடத்தப்படுவதாக துடியலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, அச்சாலையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் எஸ்.சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சந்திரகுமார் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய அனுமதியின்றி 20 டன் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா(53). கணுவாய் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த முரளி(54) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai