சுடச்சுட

  

  விபத்தில் அடிபட்டதில் மூளைச்சாவு அடைந்த ஈரோட்டைச் சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

  ஈரோட்டைச் சேர்ந்த நகை வேலை செய்யும் பாலசுப்பிரமணியத்தின் மகன் பி.செல்வகுமார் (51). ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கடந்த மே 30-ஆம் தேதி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் ஜூன் 3-ஆம் தேதி வரை அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் செல்வகுமாருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. செல்வகுமாருக்கு மனைவி திலகவதி, மகன் பரமானந்தம் ஆகியோர் உள்ளனர்.

  மூளைச் சாவடைந்த செல்வகுமாரின் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தானமாக வழங்கப்பட்டன. உரிய நேரத்தில் உடல் உறுப்புகளைத் தானம்

  வழங்கியதற்கு செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் பக்தவத்சலம் நன்றி தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai