சுடச்சுட

  

  மேட்டுப்பாளையம் தாலுகாவில் புதன்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து 126 மனுக்கள் பெறப்பட்டன.

  முகாமிற்கு, கோவை சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை வட்டாட்சியர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தனர்.

  இதில், கெம்மாரம்பாளையம் ஊராட்சியிலிருந்து 26, தோலம்பாளையம் ஊராட்சியில் 66, வெள்ளியங்காடு ஊராட்சியில் 13, காளம்பாளையம் ஊராட்சியில் 21 என மொத்தம் 126 மனுக்கள் பெறப்பட்டன.

  பட்டா மாறுதலுக்கு 50 பேரும், வீட்டுமனைப் பட்டாவுக்கு 23 பேரும், முதியோர் உதவித் தொகைக்கு 13 பேரும், நில அளவை உட் பிரிவுக்கு 22 பேரும், இதரப் பிரிவுகளுக்கு 18 பேரும் மனுக் கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்கப்படுமென ஜமாபந்தி அலுவலர் சண்முகராஜ் தெரிவித்தார்.

  ஜமாபந்தியில் பங்கேற்ற எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், நகர நிலவரித் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட ஓடந்துறை பகுதியைச் சேர்ந்த 43 பேருக்கு பட்டா வழங்கினார்.

  ஜூன் 11-ஆம் தேதி இரும்பறை, சின்னகள்ளிப்பட்டி, மூடுதுறை, இலுப்பநத்தம் ஊராட்சி மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுமென வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

  காரமடை ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார், மாவட்டக் கவுன்சிலர் சிவசாமி, ஊராட்சித் தலைவர்கள் வெள்ளியங்கிரி, இந்திராணி, தனி வட்டாட்சியர் ரங்கராஜ், துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள் முத்துசாமி, சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai