சுடச்சுட

    

    "ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்'

    By கோவை,  |   Published on : 07th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆங்கில வழி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணராஜன் தலைமை வகித்தார். செயலர் மா.ராஜசேகரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளவிருக்கும் ஆசிரியர் பணியிட மாறுதலை தொடக்கக் கல்வித் துறைக் கைவிட வேண்டும். இப்போது தமிழகம் முழுவதும் தீவிர மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த கல்வியாண்டு மாணவர் பதிவு அடிப்படையில் ஆசிரியர் பணியிட மாறுதல் செய்வது சரியாகாது. எனவே, ஆசிரியர் பணியிட மாறுதலைத் தவிர்க்கவேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கற்பித்தல் முறை துவங்கப்படுகிறது. ஒன்றியத்துக்கு 20 பள்ளிகள் வரை இம்முறை அமல்படுத்தப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகளை ஒரே ஆசிரியர் கற்பிக்கும் சூழ்நிலை உள்ளது. இது கூடுதல் பணிச்சுமையாகும். எனவே, இப்பள்ளிகளில் கூடுதலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    பள்ளித் தொகுப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இக்கூட்ட நாள்கள் கடந்த கல்வியாண்டில் வேலை நாள்களாக இணைக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு கலந்தாய்வுக் கூட்ட நாள்களை வேலை நாள்களாக அறிவித்து இணைக்கவேண்டும்.

    தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக மேற்கொள்ள ஆவண செய்யவேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai