சுடச்சுட

  

  இன்று ஈஷா விவசாய இடுபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்

  By கோவை,  |   Published on : 07th June 2014 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈஷா சார்பில் தொண்டாமுத்தூரில், விவசாய இடுபொருள்கள் விற்பனை நிலையம் சனிக்கிழமை (ஜூன் 7) தொடங்கப்பட உள்ளது.

  தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில், ஆயிரம் விவசாயிகள் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஈஷா அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் கீழ், சிறு விவசாயிகளை வேளாண் வணிக கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைத்து வெள்ளிங்கிரியில் உழவன் உற்பத்தியாளர் மையம் தொடங்கப்பட்டது.

  இந் நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதி, பூலுவபட்டி சந்தையில் விவசாயிகளுக்குத் தேவையான தரமான இடுபொருள்கள் கிடைக்க வசதியாக விற்பனை நிலையத்தை (விதை, உரம், பூச்சிக்கொல்லி) அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

  இம் மையத்தின் மூலமாக உற்பத்திச் செலவைக் குறைத்து தரமான உற்பத்தியை மேற்கொள்வது மட்டுமின்றி, உற்பத்திப் பொருளுக்கு சரியான விலை கிடைக்கச் செய்வதாகும். விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுவதே இம் மையத்தின் நோக்கம். இதனால், விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் தரமான பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai