சுடச்சுட

  

  தீவிரவாதி ஹைதர் அலியை 7 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

  By கோவை,  |   Published on : 07th June 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலியை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸார் சார்பில் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

  கோவை, வின்சென்ட் சாலையைச் சேர்ந்தவர் அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி (45). இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு கோவையில் கொலை செய்யப்படட இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து பிறகு தலைமறைவானார்.

  இவர், கடந்த செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கோவை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கூறப்பட்ட வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இப்போது அவர் இந்து அமைப்பு நிர்வாகிகளைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி ஹைதர் அலி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

  இந்நிலையில், ஹைதர் அலியை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸார் சார்பில் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையையும் வரும் 10-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai