சுடச்சுட

    

    கோவை அருகே, போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களை ரத்து செய்ததற்கு கொங்குநாடு ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்ட அறிக்கை: வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் போத்தனூரில் நின்று செல்லும் ரயில்களான யஷ்வந்த்பூர் - கண்ணனூர், சென்னை - திருவனந்தபுரம் ரயில்கள் போத்தனூரில் நிற்காது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு கொஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இல்லாவிட்டால் ரயில்வே போராட்டக்குழுவோடு இணைந்து கொங்குநாடு ஜனநாயகக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai