சுடச்சுட

    

    மாநில டேக்வாண்டோ சாம்பியன் போட்டியில் கோவை மாணவர்கள் 12 பேருக்குப் பதக்கம்

    By கோவை  |   Published on : 07th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் மாநில அளவில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 3 தங்கப் பதக்கம் உள்பட 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.

    தேசிய டேக்வாண்டோ கழகத்தின் மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டிகள் மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஹரியானா மாநிலம், குர்ஹான் நகரத்தில் ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கின்றனர்.

    கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட விளையாட்டு டேக்வாண்டோ கழகத்தின் (கொடிஸ்டா) சார்பில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்:

    சண்டைப் பிரிவு (பைட்டிங்): 1.ஆர்.ஆகாஷ், சப்-ஜூனியர், தங்கம், மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளி. 2.அகல்யா தேவி, கேடட், தங்கம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம். 3. ஏ.எஸ்.விஷ்ணுவர்தன், ஜூனியர், தங்கம், ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா. 4. எஸ்.தமிழ் இலக்கியா, சப்-ஜூனியர், வெள்ளி, சௌடேஸ்வரி வித்யாலயா. 5. சுபம் போஸ்லே, கேடட், வெண்கலம், செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி. 6. மணிகண்டன், ஜூனியர், வெண்கலம், பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளி. 7. அனுபமா, சப்-ஜூனியர், வெண்கலம், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 8. அவந்திகா, கேடட், வெண்கலம், ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா. 9. ஆதிஷ், சப்-ஜூனியர், வெண்கலம், லிஸிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

    செய்து காட்டல் (பூம்úஸ): 1.ஆர்.ஆகாஷ், சப்-ஜூனியர் (தனி நபர்), வெண்கலம், மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளி. 2.ஆர்.ஆகாஷ், சப்-ஜூனியர் (குழு), வெண்கலம், மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளி. 3. அவந்திகா, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai