சுடச்சுட

    

    "வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பட அனுமதிக்கக் கூடாது'

    By கோவை  |   Published on : 07th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதியை மீறிச் செயல்படும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என, மதிமுக இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து, கோவை மாவட்ட சுற்றுச்சூழல் நலப் பொறியாளர் ரவிச்சந்திரனிடம், அவர் அளித்த மனு விவரம்: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இதில், மாநகராட்சி நிர்வாகம் முறையாக நிர்வகிக்காததால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மாற்றுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு குப்பைக் கிடங்கை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மேலாண்மை செய்து தருவதாக மாநகராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மத்திய சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாகவும், மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமலும் குப்பைக் கிடங்கு செயல்பட அனுமதிக்கக் கூடாது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai