சுடச்சுட

    

    கோவை மாநகராட்சியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம் துவக்கம்

    By கோவை  |   Published on : 08th June 2014 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சியில் ரூ. 1.19 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ரூ. 61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள 50 கி.வா. சோலார் மின்னுற்பத்திக் கலன் மூலம் 25 யூனிட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படும். இதனால் ஓராண்டுக்கு ரூ. 10.80 லட்சம் மாநகராட்சிக்கு சேமிப்பாகும்.

    மேற்கு மண்டலம், காந்தி பூங்கா, ஆர்.கே.பாய் நகர்நல மையத்தில் ரூ. 9.70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த சூரியஒளி மின்னுற்பத்தி திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள 6 மகப்பேறு மருத்துவமனைகளில் தலா ரூ. 9.70 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 58.20 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நகர்நல மையத்திலும் 7.50 கி.வா. சோலார் மின் உற்பத்திக்கலன் நிறுவப்பட்டுள்ளதால் தினசரி 40 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால் ஒவ்வொரு நகர்நல மையத்திலும் ஆண்டுக்கு ரூ. 1,07,865 சேமிக்கப்படும், இதன்மூலமாக நகர்நல மையங்களில் ஏழைத் தாய்மார்கள் எந்த நேரமும் பிரசவம் பார்த்துக்கொள்ள தடையில்லா மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

    ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவ மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்து, மாணவ மாணவிகளுக்கு அவற்றை வழங்கினார். இதனை மாநகராட்சி கல்விப் பிரிவு தயாரித்துள்ளது. இத்திட்ட மதிப்பீடு ரூ. 10 லட்சம் ஆகும்.

    மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 25-வது வார்டு, கிருஷ்ணசாமி சாலையில் ரூ. 54 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 10 வணிக வளாகக் கடைகளையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார். மாநகர மேயர் (பொ) சு.லீலாவதி உண்ணி தலைமை வகித்தார். ஆணையர் க.லதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேலஞ்சர் துரை, தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai