சுடச்சுட

    

    கோவை - திருப்பூர் வழியாகச் சென்ற இரண்டு ரயில்கள் ரத்து

    By கோவை,  |   Published on : 08th June 2014 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் இரண்டு ரயில்களை ரத்து செய்ததைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    யஷ்வந்த்பூர் - கண்ணனூர் விரைவு ரயில் கோவை, போத்தனூர் மற்றும் திருப்பூரிலும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று சென்றுவந்தன. இந்நிலையில், ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த ரயில்கள் கோவை போத்தனூர் மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    அதேசமயம், போத்தனூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கவேண்டும்

    என கோரிக்கை

    வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போத்தனூர் ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிற்காமல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை - பெங்களூர் இடையில் இரவு நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதேநேரத்தில், கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள், யஷ்வந்த்பூர் - கண்ணனூர் ரயிலைப் பயன்படுத்திவந்தனர்.

    இதில், கர்நாடக மாநிலத்தில் 63 கி.மீட்டரும், தமிழகத்தில் 350 கி.மீட்டரும்,

    கேரளத்தில் 237 கி.மீட்டரும் என மொத்தம் 648 கி.மீ. தூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 63 கி.மீ. மட்டுமே செல்லும் ரயில், 3 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    கேரள மாநிலத்தில் 237 கி.மீ. செல்லும் ரயில் 9 ரயில் நிலையங்களிலும், 350 கி.மீ. செல்லும் தமிழகத்தில் 3 ரயில் நிலையங்களிலும் மட்டுமே நின்று செல்கிறது. இதனால், தமிழகத்தில் அதிக தூரம் பயணிக்கும் ரயில் தமிழக மக்களுக்கு பயன்படாமல் இருந்து வருகிறது.

    கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேரம் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகள் அதிகக் கட்டணம் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

    அதேசமயம், கோவைக்கு அறிவிக்கப்பட்ட ரயில்களை கேரள மாநிலம் வரை நீட்டிக்கும் ரயில்வே துறை, கேரள மாநிலத்தில் இருந்து

    இயக்கப்படும் ரயில்களை கோவை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

    எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோவை ரயில் நிலையம் முன்பு வரும் 17-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai