சுடச்சுட

  

  இரு சக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பேரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

  கோவை, காந்திமாநகர் பகுதியில் சரவணம்பட்டி போலீஸார் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

  அதில் 4 கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும் அதைக் கடத்தப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கஞ்சா கடத்தியவர்கள் தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லபாண்டி (36), செங்காடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற கைகாட்டி பிரகாஷ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai