சுடச்சுட

    

    கோவை குறிச்சி குளத்தில் மாநகராட்சி ஆணையர் க.லதா தலைமையில் 300 தன்னார்வலர்கள் மூலம் சுமார் 750 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், குறிச்சி குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சி ஆணையர் க.லதா தலைமையில், குறிச்சி குளம் பாதுகாப்பு தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் சேகரிப்பு முகாமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடத்தியது. இதில், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் குறிச்சி குளம் பாதுகாப்பு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 300 இளைஞர்கள் ஒருங்கிணைந்து, காலை 6 மணி முதல் 9 மணி வரை குறிச்சி குளத்தில் 750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்தனர்.

    அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற குறிச்சி குளம் பாதுகாப்பு தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்களை மாநகராட்சி ஆணையர் க.லதா பாராட்டினார். மேலும், இதுபோன்ற சுற்றுசூழல் பாதுகாப்புப் பணிகளை தொடர்ந்து செய்வதுடன், மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai