சுடச்சுட

  

  கோவையின் நீராதாரமாக விளக்கும் சிறுவாணி அணையில் உள்ள குழாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

  கோவை, காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அருகில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

  கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை கோவை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் குறையும்போது குழாயின் கடைசி வால்வில் இருந்து தண்ணீர் உறுஞ்சப்பட்டு வந்தது.

  இந்நிலையில் அந்த கடைசி வால்வை அடைக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இம்முயற்சியை கேரள அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கேரள மாநிலத்தில் வசித்துவரும் தமிழர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும் வகையில் பொய் வழக்குகள் தொடர்வதையும் அம்மாநில அரசு கைவிட வேண்டும்.

  பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் நீராதாரம் பூர்த்தியடையும்.

  கோவை, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நொய்யல் நதியைப் பாதுகாக்கவும், மழைக்காலத்திற்கு முன்னதாக நகரில் பாதாள சாக்கடைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai