சுடச்சுட

  

  செல்வ சிந்தாமணி குளம் 15-இல் தூர்வாரல்: தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி அழைப்பு

  By கோவை  |   Published on : 09th June 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை, செல்வசிந்தாமணி குளத்தை ஜூன் 15-ஆம் தேதி தூர்வார மக்களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

  இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள வேண்டுகோள்:

  கோவையை அடுத்த செல்வபுரத்தில் உள்ள சிந்தாமணி குளம் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெற உள்ளது.

  மழைநீர் சேகரிப்பதற்காகவும், மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மாபெரும் மக்கள் பங்கேற்புடன் செல்வ சிந்தாமணி குளத்தைத் தூர்வாரும் பணிக்கு மாநகராட்சி மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு உக்கடம் பெரிய குளத்தில் மாபெரும் மக்கள் பங்கேற்புடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது போல, தற்பொழுதும் மாநகர மக்கள் ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன் வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள செல்வபுரம் செல்வ சிந்தாமணி குளம் தூர்வாரும் திருவிழாவுக்கு குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.

  குறிப்பாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அனைத்து தன்னார்வ அமைப்புகள்,

  தொழில் கூட்டமைப்புகள், பல்வேறு நகர்நல சங்கங்கள், வணிகர்நல சங்கங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அமைப்புகள், அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர் நல சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும்.

  தூர் வாரும்பணி திருவிழாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும், தங்களிடமுள்ள கடப்பாறை, மண்வெட்டி, இரும்புச்சட்டி, கூடை போன்ற தூர்வாரும் பணிக்கான உபகரணங்களையும் கொண்டுவர வேண்டும்.இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்படும். இந்த மாபெரும் மழைநீர் சேகரிப்பிற்கான மக்கள் நலப்பணியில் மாநகர மக்கள் அனைவரும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் க.லதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai