சுடச்சுட

    

    பெ.நா.பாளையத்திற்கு ஆண்டவன் சுவாமிகள் வருகை

    By பெ.நா.பாளையம்  |   Published on : 09th June 2014 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைணவ ஆச்சாரிய பீடங்களில் ஒன்றான ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரம பீடாதிபதி ஸ்ரீரங்க ராமானுஜ ஸ்ரீமஹாதேசிகன் சுவாமிகள் சனிக்கிழமை பெரியநாயக்கன்பாளையத்திற்கு வருகை தந்தார்.

    சுவாமிகள் ஆண்டுதோறும் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்திற்கு வருகை தருவது வழக்கம். அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    ஸ்ரீரங்கத்திலிருந்து வந்த சுவாமிகளுக்கு கோவை மாவட்ட பாதுகா சேவா சமிதி சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

    தினமும் காலை ஆச்சாரியர்களின் பாதுகைகளுக்கு சிறப்பு திருமஞ்சனங்களும், பின்னர் ததியாராதனையும் நடைபெறுகின்றன. மாலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் வைபவங்கள் நடைபெறுகின்றன. ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு டி.வி.ராமானுஜாச்சார்யா மற்றும் குமாரி டி.எஸ்.ராமப்பிரியா குழுவினரின் வயலின் நிகழ்ச்சியும், ஜூன் 11-ஆம் தேதி சந்தீப் நாராயணனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

    இதில், ஆஸ்திகப் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று ஆண்டவன் சுவாமிகளிடம் அருளாசி பெறலாம் என பாதுகா சேவா சமிதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai