சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அமைச்சர் வேண்டுகோள்

    By கோவை,  |   Published on : 09th June 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

    கோவை, வ.உ.சி. மைதானத்தில் மழைநீர் சேகரிப்பு பிரசார விழிப்புணர்வு வாகனத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியது:

    தமிழக முதல்வர் ஜெயலலிதா 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தினார். இத்திட்டத்தை தற்போது அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், இதர அரசு மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்; குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்படாது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மழைநீர் நிலத்தடிக்குள் சென்று குடிநீர் பயன்பாட்டிற்கு எடுக்கும்பொழுது சுவையான குடிநீராக மாறி விடுகிறது. எனவே, மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தா.மலரவன், சேலஞ்சர் துரை, ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மாநகராட்சி ஆணையர் க.லதா, மண்டலக் குழு தலைவர் ஆதி நாராயணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் டி.சிவசங்கர், நிர்வாக பொறியாளர் எஸ்.சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai