சுடச்சுட

    

    குப்பை எரிப்பது தொடர்பான வாக்குவாதத்தில் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

    கோவை, தெற்கு உக்கடம் பூமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களை பழைய மீன் மார்க்கெட் அருகிலுள்ள பொதுக்கழிப்பிடம் அருகே எரிக்க முயன்றுள்ளார்.

    அப்போது குப்பை எரிப்பது தொடர்பாக பொதுக்கழிப்பிடத்தில் பணியாற்றும் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த விஜயகுமாருக்குடன் (41) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், பரமசிவத்தை கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. இதில் கழுத்துப் பகுதியில் படுகாயம் அடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குப்பை எரிப்பது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது பரமசிவத்தின் மகன்கள் விஸ்வநாதன், கோபிநாத் ஆகியோர் விஜயகுமாரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த விஜயகுமாரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai