Enable Javscript for better performance
ரத்தினம் கல்லூரியில் ஆசிய அடிதட சாம்பியன்ஷிப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ரத்தினம் கல்லூரியில் ஆசிய அடிதட சாம்பியன்ஷிப் போட்டி

    By கோவை  |   Published on : 09th June 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரத்தினம் பொறியியல் கல்லூரியில் முதலாவது ஆசிய அடிதட சாம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

    கோவை, ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கிய போட்டிகளை திரைப்பட நடிகர் ஆரி, ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைவர் மதன் ஏ செந்தில், தலைமை நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான அடிதட (தெக்கன்களரி) என்னும் வீர விளையாட்டை ஊக்குவிக்க ஆசிய அடிதட சம்மேளனமும் ரத்தினம் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய போட்டிகள் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்த அடிதடப் போட்டியில் சுவடு, வெறும் கைப்போர், கட்டையான ஆயுதப்பெருக்கம், உயரமான ஆயுதப்பெருக்கம், மல்லுச்சண்டை, செடிக்குச்சி சண்டை, குழு விளையாட்டு என 7 பிரிவுகள் நடைபெற்றன.

    இப்போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம் ஆகிய நாடுகள் மற்றும் ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து 500க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு திரைப்பட சண்டை யூனியன் தலைவர் பவர் எஸ்.பாண்டியன், ஆசியன் அடிதட சம்மேளனத் தலைவர் களரி பி.செல்வராஜ் மற்றும் திரைப்பட நடிகை தன்சிகா ஆகியோர் நிறைவுவிழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai