சுடச்சுட

  

  வாழைக்காய் ஏலம்:வரத்துக் குறைவால் விலை அதிகரிப்பு

  By மேட்டுப்பாளையம்,  |   Published on : 09th June 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இயங்கி வரும் வாழைக்காய் ஏல மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து காணப்பட்டது.

  இது குறித்து ஏல மைய நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் கூறியது:

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு, நெல்லித்துறை, பாலப்பட்டி, மூலத்துறை, லிங்காபுரம், காந்தவயல், அம்மன்புதூர், பவானிசாகர் நீர்த் தேக்கப்பகுதி மற்றும் திருச்சி அருகிலுள்ள காட்டுபுத்தூர், மோகனூர், தொட்டியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைத் தார்கள் விற்பனைக்கு வந்தன.

  கதளி-300, நேந்திரம் 300, பூவன் 1000, ரொபஸ்டா-400, சாம்பல்-400, ரஸ்தாளி-150, செவ்வாழை-100 என மொத்தம் 3000 தார்கள் கொண்டுவரப்பட்டன.

  இதில், கதளி கிலோ ரூ. 35-39 வரையும், நேந்திரம் கிலோ ரூ. 24-28 வரையும், பூவன் 1 தார் ரூ. 400-450 வரையும், சாம்பல் தார் ரூ. 450-500 வரையும், ரஸ்தாளி தார் ரூ. 400-450 வரையும் செவ்வாழை ரூ. 650-700 வரையும் விற்பனை ஆனது.

  ஏலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், கேரளம், மைசூர் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

  கடந்த வாரத்தை விட இந்த வாரம் 500 தார் வரை வரத்துக் குறைவாக இருந்ததுடன், தார் ரூ. 40 முதல் 50 வரையும் அதிகரித்து விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai