சுடச்சுட

  

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இளநிலை படிப்புகளில் சேர சுமார் 47,284 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை பிரிவில் 13 பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், உறுப்புக் கல்லூரிகளில் 1,040 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 780 இடங்களும் என மொத்தம் 1,820 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

  இந்த ஆண்டு இளநிலை படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விண்ணப்ப விநியோகம் மே 12-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நடந்தது. விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல்நாளே 7,075 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இதனிடையே ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பும் பணி சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதன்படி சுமார் 42,784 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

  கடந்த ஆண்டு 42 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5,284 பேர் விண்ணப்பித்திருப்பதற்கு வேளாண்மைப் படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கிராக்கியே காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ஜூன் 16-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும், முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai