சுடச்சுட

  

  "ஆபரேஷன் கோல்டு' திட்டத்தின்கீழ் வாகனத் தணிக்கை: ஒரே நாளில் 360 வழக்குகள்

  By கோவை,  |   Published on : 10th June 2014 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் "ஆபரேஷன் கோல்டு' திட்டத்தின்கீழ், மாநகரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  கோவை மாநகரில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த "ஆபரேஷன் கோல்டு' என்ற திட்டம் மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ், அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது.

  அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

  இத் திட்டத்தின்கீழ், இந்த வாகனத் தணிக்கை வாரம் இருமுறை நடைபெறும். ஒரே தவறுக்காக தொடர்ந்து அபராதம் செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai