சுடச்சுட

    

    கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    இதில் எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், வெல்டன், ஐ.டி, உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை 471 பயிற்சியாளர்களுக்கு ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சேர்க்கை அளிக்கப்படுகிறது.

    புரடெக்சன் அன்ட் மேனுபேக்சரிங் தொழிற்பிரிவில் 125 இடங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிஎன்சி, அட்வான்ஸ் வெல்டிங், ஜிக்ஸ் அன்ட் பிக்சர்ஸ் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாகும். மேலும், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

    அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கல்வி உதவித்தொகை ரூ.500 அரசால் வழங்கப்படுகிறது. மேலும் சீருடைகள், காலணிகள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி தொழிற்பிரிவுகளை பொறுத்து 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது முதல் 40 வரை ஆகும்.

    இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai