சுடச்சுட

  

  காடம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்

  By கோவை,  |   Published on : 10th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வால்பாறை காடம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தங்கும் விடுதி அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தத் தொகுதி எம்எல்ஏ எம்.ஆறுமுகம் மனு அளித்துள்ளார்.

  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் அளித்த மனு விவரம்:

  கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்குள்பட்ட காடம்பாறை நீர்மின் நிலையம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப் பள்ளியில், மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக இந்த விடுதி மூடப்பட்டுவிட்டது.

  அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ள இப் பள்ளியில் மின்நிலையப் பகுதி, காடம்பாறை அணை, காடம்பாறை குடியிருப்பு, வெள்ளிமுடி, கருமுட்டி, மாவடைப்பு, குளிப்பட்டி, அப்பர் ஆழியார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

  மழைக் காலங்களிலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள காலங்களிலும் இங்கு குழந்தைகள் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால், ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பெறுவது தடைபடுகிறது.

  எனவே, இப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏழை ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதியை போர்கால அடிப்படையில் அமைத்துக் கொடுத்து உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai