Enable Javscript for better performance
குடியரசுத் தலைவர் உரையில் நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் உரையில் நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம்

    By கோவை,  |   Published on : 10th June 2014 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசுத் தலைவர் உரையில் நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளதற்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை உரையாற்றினார்.ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் கொண்டு வரப்படும். வறுமையை ஒழிக்க அரசு பாடுபடும். வேளாண் துறையில் அதிக முதலீடு செய்யப்படும் என்று உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்விக் கொள்கை, விவசாயம் காத்திட புதிய முயற்சிகள், புதிய சுகாதாரக் கொள்கைகள், கிராமப்புறக் குடிநீர் வசதி என ஒட்டுமொத்த மக்களின் நலன் காக்கும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற அறிவிப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வைர நாற்கர ரயில் திட்டமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முந்தைய வாஜ்பாயி அரசு கொண்டு வந்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பாகச் செயல்படுவது போல ரயில் திட்டமும் செயல்படும் என்பதில்

    சந்தேகமில்லை.

    குடியரசுத் தலைவரின் உரை எதிர்க்கட்சிகள் கூடக் குறை சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. குஜராத்தைப் போல நாடு முழுவதும் விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai